AstraZeneca ஏற்றிக்கொண்டவர்களுக்கு Sputnik V தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

AstraZeneca ஏற்றிக்கொண்டவர்களுக்கு Sputnik V தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வு

முதலில் AstraZeneca தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு Sputnik V தடுப்பூசியை இரண்டாவதாக ஏற்றுவதற்குள்ள இயலுமை குறித்து ஆராயுமாறு விசேட நிபுணர்கள் குழு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பான செயற்றிட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு தேவையான 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தாமதமின்றி உரிய காலப்பகுதியில் AstraZeneca தடுப்பூசியை ஏற்கனவே பெற்றுக்கொண்டவர்களுக்கு மீள ஏற்ற முடியும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, Sputnik V மற்றும் AstraZeneca ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் செயற்பாடுகளும் ஒத்ததாகக் காணப்படுவதால், இரண்டாம் கட்டமாக Sputnik V தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆராயுமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பரிந்துரை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.

News first Tamil

No comments:

Post a Comment