60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜை இலங்கை விமான நிலையத்தில் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 9, 2021

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜை இலங்கை விமான நிலையத்தில் கைது

60 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜையொருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான தென்னாபிரிக்க பிரஜை கொக்கேய்ன் போதைப் பொருளுடன் கென்யாவின் நைரோபியிலருந்து கட்டாரின் தோஹாவை சென்றடைந்துள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து அவர் கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொக்கேய்ன் போதைப் பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறையில் ஷாம்பு போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எடுத்து வரப்பட்டுள்ளதுடன், சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது 2.29 கிலோ கிராம் எடையுள்ள கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கொக்கேய்ன் போதைப் பொளும், கைதான தென்னாபிரிக்க பிரஜையும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad