மஞ்சள் கடலில் 400 தொன் எண்ணெய் கசிந்தது - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

மஞ்சள் கடலில் 400 தொன் எண்ணெய் கசிந்தது

எண்ணெய் கப்பல் ஒன்று இவ்வார ஆரம்பத்தில் சீனத் துறைமுகத்திற்கு அப்பால் இன்னொரு கப்பலுடன் மோதியதில் சுமார் 400 தொன் எண்ணெய் மஞ்சள் கடலில் கசிந்துள்ளது. 

அந்தச் சம்பவத்தால் சிங்டாவ் துறைமுகத்திற்குள் நுழையும், வெளியேறும் கப்பல்களுக்கு எவ்விதச் சிரமமும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எண்ணெயை அகற்ற மாசுநீக்கும் 12 கலங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இருப்பினும் அங்கு சுற்று வட்டாரத்தைப் பார்ப்பது தெளிவாக இல்லாத காரணத்தால் எண்ணெயை அகற்றும் நடவடிக்கையில் இடையூறு எற்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தால் உயிருடற்சேதம் ஏதும் இல்லை. எவரும் காயமடையவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad