30 நாள் பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்!! - News View

Breaking

Post Top Ad

Friday, May 28, 2021

30 நாள் பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்!!

தமிழக முதல்வர் உத்தரவில் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பேரறிவாளன் இன்று 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக அவரது தாய் அற்புதம்மாள் அவரை பரோலில் விடுவிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி 30 நாட்கள் சாதாரண விடுப்பில் செல்வதற்கு உத்தரவிட்டிருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைகள் அறிக்கைகள் உரிய ஆணைகள் சமர்ப்பிக்கப்பட்டு இன்று பேரறிவாளன் பரோலில் விடுவிக்கபடவுள்ளார்.

அவரை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அழைத்து சென்றனர். இன்று முதல் 30 நாட்கள் சாதாரண விடுப்பில் அவர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள நிலையில் நீரழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் கொரானா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் செல்கின்றார்.

இதையடுத்து புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad