ஜூன் 30 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்தது இந்திய மத்திய அரசு - News View

Breaking

Post Top Ad

Friday, May 28, 2021

ஜூன் 30 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்தது இந்திய மத்திய அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ஆம் திகதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2ஆவது அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 23,43,152 ஆக உள்ளது. கடந்த மே 10ஆம் திகதி முதல் நோய்த் தொற்று கணிசமாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 76,755 குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 8.50 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் தொடர்ந்து 12ஆவது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவான அளவில் நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,86,364 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ஆம் திகதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச பயணிகளின் விமானங்கள் ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்படும், ஆனால் சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறையால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என கூறி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad