முன்னாள் முடிக்குரிய இளவரசர், மன்னருக்கு தனது விசுவாசத்தை வெளியிட்டார் - ஜோர்தான் அரச குடும்ப பதற்ற நிலை தணிந்தது - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

முன்னாள் முடிக்குரிய இளவரசர், மன்னருக்கு தனது விசுவாசத்தை வெளியிட்டார் - ஜோர்தான் அரச குடும்ப பதற்ற நிலை தணிந்தது

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜோர்தானின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ஹம்சா பின் ஹுஸைன் மன்னர் அப்துல்லாஹ்வுக்கு தனது விசுவாசத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 41 வயதான இளவரசர் ஹம்சா, அரசியலமைப்புக்கு தனது உறுதியை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னெப்போதும் ஏற்படாத இந்த பதற்ற நிலைக்கு தீர்வு காண மன்னர் தனது சிற்றப்பாவான இளவரசர் ஹசனின் உதவியை நாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சதிவேலையில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை இளவரசர் ஹம்சா நிராகரித்துள்ளார்.

அரச மாளிகையில் இருந்து கையெழுத்திடப்பட்டு கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட கடிதத்தில், இளவரசர் ஹம்சா, 'மாட்சிமை பொருந்திய மன்னருடன் நான் கைகோர்த்துள்ளேன். ஜோர்தானின் அன்புக்குரிய ஹாஷிமித் இராட்சியத்தின் அரசியலமைப்பில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னர் அப்துல்லாஹ்வின் ஒன்றுவிட்ட சகோதரரான இளவரசர் ஹம்சா முடிக்குரிய இளவரசராக இருந்து வந்த நிலையில் அந்த அந்தஸ்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு மன்னரின் மகன் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad