நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் : விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் : விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகளால் சரியான தகவல்களை அரசியல்வாதிகளுக்கு அல்லது தீர்மானம் மேற்கொள்பவர்களுக்கு வழங்குவதன் மூலமே இந்தத் தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லையென்ற போதிலும், நோயாளர்களுக்கு அதனை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான முறையை செயற்திறனாக்க வேண்டும் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad