காத்தான்குடியில் நிதி நிறுவன கட்டிடமொன்றில் திடீர் தீ விபத்து! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

காத்தான்குடியில் நிதி நிறுவன கட்டிடமொன்றில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவன கட்டிடமொன்று இன்று (07) இரவு தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பொலிசார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த நிதி நிறுவனம் வழமை போல இன்று மாலையில் கடமைகள் முடிவடைந்து பூட்டப்பட்டுள்ள நிலையில் சுமார் 7 மணியளவில் கட்டிடம் தீப்பற்றியது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு மக்கள் வௌியேற்றப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் காத்தான்குடி பிரதேசத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment

Post Bottom Ad