முகக்கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

முகக்கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிப்பு

முழு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றிலிருந்து மீழ்வதற்கு அனைத்து நாடுகளுமே முயற்சி செய்து வந்தாலும், அதன் பாதிப்பு குறைவதாக இல்லை. இந்நிலையில், தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ. 1,24,211) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தலைநகரில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக்கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் (இலங்கை மதிப்பில்சுமார் 37239.05) அபராதம் விதித்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது பொலிஸில் புகார் அளித்துள்ளதாக பாங்காக் கவர்னர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.

அத்தோடு, இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 1ஆம் திகதி முதல் இந்திய பயணிகள் தாய்லாந்து வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமுலில் இருக்குமென்றும் அதே சமயம் இந்தியாவிலிருந்து தாய்லாந்து வரும் மக்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad