பி.சீ.ஆர். பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது தற்கொலை செய்வதற்கு சமன் - தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

பி.சீ.ஆர். பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது தற்கொலை செய்வதற்கு சமன் - தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர

(செ.தேன்மொழி)

முறையான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. பி.சீ.ஆர். பரிசோதனைகள் நிறுத்தப்படவில்லை. அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, புதிதாக வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவருடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவருமே பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்டுபடுத்தப்படுகின்றார்கள். பி.சீ.ஆர். பரிசோதனைகளை நிறுத்தி வைப்பது என்பது, தற்கொலை செய்வதற்கு சமனானதாகும்.

வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் எழுமாறான பி.சீ.ஆர் பரிசோதனைகளும் அவ்வாறே இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார மத்திய நிலையங்களில் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதனால், அவர்களுக்கான எழுமாறான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் வரும் வரையில் இனந்தெரியாத நபர்களுடடான தொடர்பினை தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

இந்நிலையில் சீனாவிலிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 3 இலட்சம் தடுப்பூசிகளை இங்கிருக்கும் சீன நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு, கண்டி, புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சீனர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. 

எஞ்சிய தடுப்பூசிகள் தொடர்பில் நிபுணர் குழு பரிசோதனைகளை செய்து, நாட்டு மக்களுக்கு செலுத்துவதா ? இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்கும். 

தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றாலும் முறையான சுகாதார விதிகளை கடைப்பிடித்தால் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment