பாகிஸ்தானுக்கான விசா மற்றும் வரி ஏற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

பாகிஸ்தானுக்கான விசா மற்றும் வரி ஏற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

இந்த ஆண்டு ஒக்டோபரில் டி-20 உலகக் கிண்ணத்தை நடத்த இந்தியா தயாராகி வருவதால், விசா மற்றும் வரி ஏற்பாடுகள் குறித்து கிரிக்கெட்டின் உலக நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஊக்கமளிக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கு இடையே 2013 முதல் கிரிக்கெட் தொடரை நடத்தவில்லை.

இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுகள் உறைபனியாக இருப்பதால், உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக தனது வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் விசாக்களுக்கான உத்தரவாதம் அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் எஹ்சன் மணி முன்னதாக ஐ.சி.சி.யிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அரசாங்கத்திடமிருந்து போட்டிகளுக்கு வரி விலக்கு பெறுவது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

"இந்தியாவில் ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தை சுற்றியுள்ள ஏற்பாடுகள் குறித்து வாரியம் ஒரு புதுப்பிப்பைப் பெற்றது" என்று ஐ.சி.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரி ஏற்பாடுகள் மற்றும் விசா உத்தரவாதங்கள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் நேர்மறையான கலந்துரையாடல்கள் குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் புதுப்பிப்பும் இதில் அடங்கும்.

இவ் இரு பிரச்சினைகளும் அடுத்த மாதத்தில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad