ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்சிஜன் போதியளவு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஒக்சிஜனுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என அவர் கூறினார்.

நாட்டிற்கு மருத்துவ ஒக்சிஜனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோக சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஒக்சிஜன் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நாளையும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைகளுக்கும் மேலதிகமான ஜம்போ சிலிண்டர்களை அடுத்த வாரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment