அணுசக்தி ஒப்பந்தம் குறித்து உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஈரான் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஈரான்

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானும் முக்கிய உலக வல்லரசுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இப் பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்றன.

"வியன்னாவில் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை, எங்கள் அடுத்த கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும்" என்று ஈரானிய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அராச்சி இச்சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சந்திப்பு "வெற்றிகரமாக" இருப்பதாக ரஷ்யாவின் பிரதிநிதி மிஹ்கைல் உல்யனோவ் டுவிட்டரில் பதிவிட்டார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக 2018 மே மாதம் கைவிடப்பட்ட கூட்டு விரிவான செயல் திட்டத்தை (JCPOA)) புதுப்பிப்பதற்கான வழிகள் குறித்து நாடுகள் தொடர்ந்து விவாதிக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் செவ்வாயன்று அரச தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad