மகா சங்கத்தினர் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது - தேசிய பிக்கு முன்னணி - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

மகா சங்கத்தினர் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது - தேசிய பிக்கு முன்னணி

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து மகாசங்கத்தினர் முதலில் தெளிவுபெற வேண்டும். நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் மகா சங்கத்தினர் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது என தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய பிக்கு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அரசாங்கத்திற்குள் இரு வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் இத்தன்மையே காணப்பட்டது. மக்களின் அரசியல் சிந்தனையினை திசை திருப்புவதற்காக அரசியல்வாதிகள் இரு வேறுபட்ட கொள்கைகளை கொண்டுள்ளார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட முயற்சித்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டது. நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் கொள்கையில் அரசாங்கம் தற்போதும் உறுதியாக உள்ளது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய மதj; தலைவர்களும, அரசியல்வாதிகளும் இச்சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் தொடர்பில் மகா சங்கத்தினர் முதலில் தெளிவுபெற வேண்டும்.

நாட்டின் பொதுச் சட்டத்திற்கு முரணான விடயங்களை அச்சட்டமூலம் கொண்டுள்ளது என்பது வெளிப்படை தன்மையுடன் அறிந்து கொள்ள முடியும். அரசியல்வாதிகள் மகா சங்கத்தினரை சந்தித்து இச்சட்டமூலம் குறித்து ஒரு சில விடயங்களை மாத்திரம் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் மகா சங்கத்தினர்கள் பங்குதாரர்களாகுவது பௌத்த சாசனத்திற்கு முரணானது அரசியல்வாதிகளின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுபவர்கள். 

ஆகவே நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மகாசங்கத்தினருக்கு பௌத்த சாசனத்தின் ஊடாக அதிக பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை செயற்படுத்த மகா சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்

No comments:

Post a Comment