சாய்ந்தமருதில் கடைகள், மதஸ்தலங்களுக்கு சுகாதார பரிசோதகர் குழு திடீர் விஜயம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

சாய்ந்தமருதில் கடைகள், மதஸ்தலங்களுக்கு சுகாதார பரிசோதகர் குழு திடீர் விஜயம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொவிட்-19 யின் மற்றுமொரு அலையிலிருந்து நாமும் பாதுகாத்து மற்றையவரையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர் குழு நேற்றிரவு சாய்ந்தமருதில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.அல் அமீன் றிசாட் கண்காணிப்பில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் தலைமையில், இந்த பரிசோதகர் குழு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

கொவிட்-19 யினை முன் கூட்டியே கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயத்தின் போது கொவிட்-19 தொடர்பான சட்ட திட்டங்கள் மற்றும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டி சுகாதார நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து தெளிவுபடுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad