மிக மோசமான ஜனநாயக அடக்கு முறைக்குள் இலங்கை : சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்..! - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

மிக மோசமான ஜனநாயக அடக்கு முறைக்குள் இலங்கை : சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்..!

(ஆர்.யசி)

நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்ட், இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா, ஜெர்மனியின் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், ருமேனியாவின் தூதுவர் விக்டர் சியுஜ்தியா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று காலை (27.04.2021) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad