அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின்படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்க வேண்டும் - எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி. விசனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின்படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்க வேண்டும் - எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி. விசனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.

அப்பதிவில், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்: ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பற்றி தெரிவித்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad