ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும ; வர்த்தமானி வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும ; வர்த்தமானி வெளியீடு

வெற்றிடமான ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு, கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு, அடுத்தபடியாக விருப்பு வாக்குகளை கொண்டுள்ள அஜித் குமார மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பு அடங்கிய அதி விசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (08) பிற்பகல் வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்புரிமையை ரஞ்சன் ராமநாயக்க இழந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் நேற்றையதினம் அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad