தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், விவசாயிகளுக்கு பீ.சீ.ஆர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், விவசாயிகளுக்கு பீ.சீ.ஆர்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதால், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வரவு அதிகரித்துள்ளது.

இதனால் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற குழுவினர் பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனை மேலும் அதிகரிப்பதற்கு தம்புத்தேகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் டபிள்யு.பீ.எஸ்.என்.வாசல தெரிவித்தார். 

இச்சந்தைக்கு வருவோரில், 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இச்சோதனை நடவடிக்கைகள் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலைய வளாகத்திலும் வெல்லன்கடவல பிரதேசத்திலும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்களான டபிள்யு. பீ.எஸ்.என்.வாசல, எஸ்.என் திசாநாயக்க மற்றும் புத்திக மல்லவாராச்சி உள்ளிட்ட குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

No comments:

Post a Comment