கற்றல் செற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் ஆனால் ஒத்துழைப்பு தேவை என்கிறார் விசேட வைத்திய நிபுணர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

கற்றல் செற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் ஆனால் ஒத்துழைப்பு தேவை என்கிறார் விசேட வைத்திய நிபுணர்

(எம்.மனோசித்ரா)

மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக பாடசாலைகளை தொடர்ந்தும் நிர்வகித்துச் செல்வதே பொறுத்தமானது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுமாயின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் சில பாடசாலைகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஆசியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

எனினும் இவர்களுக்கு பாடசாலைகளுக்குள் தொற்று ஏற்பட்டதை விட, வெளியிடங்களிலிருந்தே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக பாடசாலைகளை தொடர்ந்தும் நிர்வகித்துச் செல்வது பொறுத்தமானது.

எனினும் இதன்போது மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மாத்திரமின்றி பெற்றோரும் இவ்வாறு பொறுப்புடன் செயற்படுவார்களாயின் சவாலின்றி கற்றல் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார்.

No comments:

Post a Comment