தாதிய பயிற்சி நெறி ! தரகர்களிடம் கவனம் !! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

தாதிய பயிற்சி நெறி ! தரகர்களிடம் கவனம் !!

எம்.எஸ்.எம்.நூர்தீன்

IVA Nursing School எனும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வேறொரு நிறுவனத்திற்கு தாதிய மாணவர்களை உள்ளீர்க்கும் போலிச் செயற்பாடு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அறிய வந்துள்ளது.

பல வருடங்களாக செயற்பட்டு வரும் IVA Nursing School இல் இருந்து பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று இன்று பிரபல்யமிக்க அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தாதியர்களாக கடமையாற்றி, மேற்படி நிறுவனத்துக்கு நற்பெயர் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையிலேயே அந்த நற்பெயரை, தமக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த போலி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"IVA Nursing School இற்கே உங்களை பயிற்சிக்காக எடுக்கிறோம்" என்று கூறி பின்னர் தாதிய மாணவர்களை, தமது நிறுவனத்துக்கு இணைத்துக் கொள்கின்றனராம். 

இந்த விவகாரத்தில் பல மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளமை தெரிய வந்ததை அடுத்து IVA நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சித்தீக் நதீர் விசேட ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

IVA Nursing School இற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கிய சான்றிதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ சான்றிதழ் மேற்படி எமது நிறுவன பெயரை பயன்படுத்தி தாதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை மாணவர்கள் முதலில் அவதானிக்க வேண்டும் என சித்தீக் நதீர் தனது அறிக்கையில் பிரதானமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இவை எவையுமற்ற, இவ்வாறான நிறுவனங்களில் தாதிய மாணவர்கள் தொடரும் ஒரு வருட கற்கை நெறி வீணாகுவதோடு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டில் கூட எந்தவொரு தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன் என்றும் IVA நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சித்தீக் நதீர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment