பிறைந்துரைச்சேனையில் கஞ்சா வியாபாரி கைது - 1850 கிராம் கேரள கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

பிறைந்துரைச்சேனையில் கஞ்சா வியாபாரி கைது - 1850 கிராம் கேரள கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து 1850 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை (26.04.2021) கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த பல்ஸர் மோட்டார் சைக்கிளும் வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை தரிக்கா வீதியை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபர் என்றும் இவர் தொடர்ந்தும் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் தொடர்புடைய வேறுநபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதை வியாபாரம் மற்றும் பாவனையில் ஈடுபடுவோர் தொடர்பில் மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad