குளியாப்பிட்டியவில் புத்தர் சிலைகள் சேதம் : இந்திய பிரஜைக்கு விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

குளியாப்பிட்டியவில் புத்தர் சிலைகள் சேதம் : இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டியவில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய - ரத்மலேவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) இரவு புத்தர் சிலைகள் சிலவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad