யாழ்ப்பாணத்தில் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

யாழ்ப்பாணத்தில் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற 29 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கிளிநொச்சி மற்றும் பதுளையைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லையென மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad