சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 34 வருட கடுழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.

அதற்கும் மேலதிகமாக பிரதிவாதிக்கு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த நஷ்டஈட்டு தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதிக்கு 5 வருட சாதாரண சிறைத் தண்டனையை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விளையாடுவதற்காக வந்த அயல் வீட்டு சிறுமியை தனது பிள்ளையை வெளியில் அனுப்பிவிட்டு குறித்த நபர் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான 3 குற்றச்சாட்டுக்களில் இரண்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது குற்றச்சாட்டில் இருந்து பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad