துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை பெற்றார் இலங்கையின் ரனிதா ஞானராஜா - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை பெற்றார் இலங்கையின் ரனிதா ஞானராஜா

இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா, காணொளி தொழில்நுட்பத்தினூடாக நேற்று (08) நடைபெற்றது.

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து, துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதை சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் முதற் பெண்மனி டொக்டர் ஜில் பைடன் மற்றும் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கள் ஆகியோர், சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிற்கு விருதை வழங்கி கௌரவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகளிலிருந்து தப்பியவர்கள் மற்றும் மத, இன ரீதியான சிறுபான்மையினர் உள்ளிட்ட இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவாக ரனிதா ஞானராஜா குரல் கொடுத்து செயற்படுகின்றார் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இராஜாங்க செயலாளரின் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதானது சமாதானம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்காக ஆதரித்து குரல் கொடுத்து செயற்படுவதில் விதிவிலக்கான துணிச்சலையும் தலைமைத்துவத்தையும் வௌிப்படுத்தும் உலகம் முழுவதிலுமுள்ள பெண்களை பாராட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, தமது அனைத்து சக பிரஜைகளின் சார்பாகவும் நீதிக்கான பாரிய அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலென்யா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், தங்களின் உரிமைகளை தாமாகவே பெற்றுக் கொள்வதற்கு சட்டத்தரணி ரனிதா ஞானராஜா உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு செயற்படுவது இலங்கையிலும் உலகிலும் துணிச்சலின் முன்மாதிரி என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலென்யா பி டெப்லிட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment