ஜெரூசலத்தின் முன்னாள் தலைமை முப்தி இஸ்ரேல் படையால் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

ஜெரூசலத்தின் முன்னாள் தலைமை முப்தி இஸ்ரேல் படையால் கைது

ஜெரூசலத்தின் முன்னாள் தலைமை முப்தியான செய்ன் இக்ரிமா சப்ரியை இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கும் அவரின் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அவரது வீட்டை சுற்றிவளைத்த இஸ்ரேலிய பொலிஸார் மற்றும் உளவுப் பிரிவைச் சேர்ந்த குழுக்கள் தமக்கு ஒத்துழைப்பு தரும்படி செய்க் சப்ரியை கேட்டுக் கொண்டனர்.

'அவரது கைதுக்கான எந்தக் காரணத்தையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை' என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தலைமை முப்தியை இஸ்ரேல் நிர்வாகம் இதற்கு முன் பல தடவைகள் கைது செய்திருப்பதோடு கடந்த ஜனவரியில் அவர் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைவதற்கும் பல மாதங்கள் தடை விதித்தது.

இந்த பள்ளிவாசல் வாளத்திற்குள் வலதுசாரி யூத மதக் குழுக்களின் வருகை அதிகரித்திருப்பதை செய்க் சப்ரி அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

கடந்த புதன்கிழமையும் பொலிஸ் படையின் பாதுகாப்புடன் இஸ்ரேலிய குடியேறிகள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் ஊடுருவியதாக இஸ்லாமிய அறக்கட்டளை குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment