வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கோவில்குளம் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கோவில்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கிராம அலுவலர் தொடர்பில் அவர் பணியாற்றிய பல்வேறு இடங்களிலும் இருந்தும் பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் வவுனியா பிரதேச செயலகத்தில் செய்யப்பட்ட போதும், அவருக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாது தொடர்ச்சியாக முறைப்பாடுகளையடுத்து இடமாற்றங்களே வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குறித்த கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad