பொத்துவில் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக கொழும்பு பௌத்த பிக்குகள் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

பொத்துவில் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக கொழும்பு பௌத்த பிக்குகள் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு

பொத்துவில் 60 ஆம் கட்டை ஊறணி கனகர் கிராம மக்களை மீள்குடியேற்றம் செய்யப்படாமை தொடர்பாக பௌத்த குருமார்கள் நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 60 ஆம் கட்டை ஊரணி கனகர் கிராம மக்கள் கடந்து 1 1/2 வருடங்களுக்கு மேலாக தமது காணிகளை வழங்கக் கோரி பல்வேறுபட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (19) கொழும்பிலிருந்து ஜம்புரவெள சங்கரத்தின தேரர் தலைமையிலானா 15 க்கும் மேற்பட்ட பெளத்த குழுவினர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டு இருந்ததுடன் மக்களிடமும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் காணி தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். 

இவ் பௌத்த குருமார்களுடனான கலந்துரையாடலில் 60 ஆம் கட்டை ஊரணி கனகர் கிராம மக்கள் சார்பாக சில காணி கோரிக்கையாளர்களும் கலந்துகொண்டு இருந்ததுடன் மக்களுடைய சிதைந்து காணப்படும் வீடுகளையும் சென்று பௌத்த குருமார்கள் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேச செயலகத்துக்கும் சென்று இவ் மக்கள் மீள் குடியேற்றம் செயப்பட்டமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் மக்களை விரைவாக மீள் குடியேற்றுவதற்கான நவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளாமையும் குறிப்பிட்டத்தக்கது.

திருக்கோவில் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad