அக்குறணை மக்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது - வேலு குமார் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Saturday, March 20, 2021

அக்குறணை மக்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது - வேலு குமார் எம்.பி.

தற்போது நாட்டில் கிராம உத்தியோகத்தர் பிரிவு மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்நடவடிக்கை இடம்பெறும். இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் மக்களுக்கு நெருக்கமான ஆரம்ப பிரிவு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகும். இது நிர்வாக அதிகார பகிர்வின் ஒரு முக்கிய அம்சம். அதேபோல எதிர்கால அரசியல் அதிகார பகிர்வினதும் முக்கிய அங்கமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மேலும் தெரிவிக்கையில், தற்போது அக்குறணை பிரதேச செயலக பிரிவில் முப்பத்தைந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளது. புதிய முன்மொழிவில் ஒரு பிரிவு மட்டும் அதிகரிக்கப்பட்டு, 36 ஆக உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது மிக பின்னடைவான முன்மொழிவொன்றாகும். அக்குறணை மக்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அக்குறனை பிரதேச செயலக பிரிவில் உள்ள பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் சனத்தொகை 3000 த்தையும் தாண்டியுள்ளது.

கிராம உத்தியோகத்தர் பிரிவு சனத் தொகை
உடவெளிகெட்டிய 3189
தொடங்கொள்ள 3106
தெலும்புகஹவத்த 3448
அளவத்துகொட 3835

இதில் அளவத்துகொட பிரிவு மட்டுமே அளவதுகொட வடக்கு மற்றும் அளவத்துகொட தெற்கு என இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. ஏனையவை தொடர்பாக எவ்வித முன்மொழிவு இல்லை.

மேலும் ஏழு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் சனத் தொகை இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது. அவை தொடர்பாகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இக்காரணிகளை கவனத்திற் கொண்டு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உரிய முன்மொழிவை செய்தல் அவசியம். இது நாம் எதிர்கால சந்ததியினரின் சுபீட்சத்திற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை மட்டும் அல்ல. எமது கடப்பாடும் ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad