இந்திய வடிவமைப்பு ரயில் பெட்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

இந்திய வடிவமைப்பு ரயில் பெட்டிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (ரைட்ஸ்) இலங்கை ரயில்வேக்கு 160 அதி நவீன ரயில் பெட்டிகளை வழங்கவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 10 அதி நவீன ரயில் பெட்டிகள் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை தனது பேஸ்புக் பதிவில், 10 இந்திய வடிவமைப்பு ரயில் பெட்டிகள் நேற்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் போக்குவரத்து துறைசார் இந்திய - இலங்கை ஒத்துழைப்பு விஸ்தரிக்கப்படுகின்றது.

இந்திய கடனுதவியில் RITES Ltd நிறுவனம் இலங்கை ரயில்வேக்கு வழங்கும் 160 ரயில் பெட்டிகளின் ஓர் அங்கமாக இவை விநியோகிக்கப்படுகின்றன என கூறியுள்ளது.

அண்மையில், கொழும்பில் உள்ள கிழக்கு கொள்கலன் முனையத்தின் வளர்ச்சியில் இந்திய மற்றும் ஜப்பானிய பங்களிப்பை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்த பின்னர், மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) உருவாக்க இலங்கை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவும் இலங்கையும் 2019 ஆம் ஆண்டில் "பொருளாதார திட்டங்களுக்கான ஒத்துழைப்பு" குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள திட்டங்களில் ஒன்றாகும், இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

No comments:

Post a Comment