நாட்டில் பெரும்பான்மைவாதம், இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்புக்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது - மங்கள சமரவீர கவலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 17, 2021

நாட்டில் பெரும்பான்மைவாதம், இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்புக்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது - மங்கள சமரவீர கவலை

(நா.தனுஜா)

நாட்டில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு போன்றவை மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னிச்சையாக இடம்பெறும் கைது நடவடிக்கைகள், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது இலங்கையில் பெரும்பான்மைவாதம், இனவாதம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவை இப்போது மிகவும் மோசம் அடைந்திருக்கின்றன.

அண்மையில் இரவில் மிகவும் தாமதாக நடமாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டமை, இளம் சூழலியலாளர் மீதான அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தற்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad