திருகோணமலையில் கடல் அலையில் சிக்குண்டு மீனவர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

திருகோணமலையில் கடல் அலையில் சிக்குண்டு மீனவர் உயிரிழப்பு

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர் இன்று (09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர் கட்டைபறிச்சான் - சாலையூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தை வடிவேல் ரவீந்திரன் (53 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கரைவலையை இழுத்துக் கொண்டிருந்த போது இவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad