பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் நாளை திறப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

பொல்கொல்ல நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் நாளை திறப்பு

பொல்கொல்ல நீர்த் தேக்கதின் அனைத்து வான் கதவுகளும் நாளை வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை திறக்கப்படும் என்று இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடாந்திர ஆய்வு நடவடிக்கைகளுக்காக நீர்த் தேக்கத்தின் முழு நீரினையும் வெளியேற்றவுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த் தேக்கத்தை அண்மித்த தாழ் நில பிரதேச வாழ் மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad