தாயுக்கும், மகளுக்கும் வாள் வெட்டு - தந்தை தலைமறைவு : வவுனியாவில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 21, 2021

தாயுக்கும், மகளுக்கும் வாள் வெட்டு - தந்தை தலைமறைவு : வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

வாள் வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad