மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் நிகழ்வு - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கிவைத்தார்.

அதே வேளை குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கிவைக்கப்பட்டது.

இச் செயற்பாட்டினை விரைவுபடுத்தி காணியினை பெற்றுக்கொடுத்தமையினை கெளரவிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகியோர் இதன் போது ஊடகவியலாளர்களினால் பொன்னாடை போர்த்து கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad