டெல்லியிலுள்ள வைத்தியசாலையில் தீ விபத்து - 50 நோயாளிகள் வெளியேற்றம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

டெல்லியிலுள்ள வைத்தியசாலையில் தீ விபத்து - 50 நோயாளிகள் வெளியேற்றம்

டெல்லி சப்தர்ஜங் வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 50 நோயாளிகள் வேறு விடுதிக்கு மாற்றப்பட்டனர்.

டெல்லியில் புகழ்பெற்ற சப்தர்ஜங் மருத்துவமனை உள்ளது. இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் ஐ.சி.யூ. வார்டில் இருந்த நோயாளிகள் அலறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 50 நோயாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றி வேறு வார்டுக்கு கொண்டு சென்றனர்.

இந்த தீ விபத்து பற்றி அறிந்ததும் 9 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad