சினேபாம் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளதால் முதற்கட்டமாக 3 இலட்சம் மருந்துகள் இறக்குமதி என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 21, 2021

சினேபாம் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளதால் முதற்கட்டமாக 3 இலட்சம் மருந்துகள் இறக்குமதி என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

சீனாவின் உற்பத்தியான சினேபாம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உபயோகிப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தடுப்பூசியை உபயோகப்படுத்த முடியும் என மேற்படி அதிகார சபை தெரிவித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 3 இலட்சம் தடுப்பூசி இலங்கைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து மேலும் 3 இலட்சம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்துள்ள அவர் அவற்றில் ஒரு தொகை தடுப்பூசிகள் அன்பளிப்பாக கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுகாதார வழிமுறைகள் முறையாக கடைபிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டால் மீண்டும் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment