228,000 குழந்தைகள் மரணம் - 3.5 மில்லியன் தேவையற்ற கர்ப்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

228,000 குழந்தைகள் மரணம் - 3.5 மில்லியன் தேவையற்ற கர்ப்பங்கள்

தெற்காசியாவில் கடந்த ஆண்டு 228,000 குழந்தைகள் கூடுதலாய் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதற்கு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என ஐ.நா கவலை தெரிவித்தது. 

மேலும், 11,000 பெண்கள் கர்ப்பகாலப் பிரச்சினைகளால் உயிரிழந்துள்ளனர். 3.5 மில்லியன் தேவையற்ற கர்ப்பங்கள் உண்டானதாகவும், அறிக்கை தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமான யுனசெப் ஆதரவோடு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விபரங்கள் தெரியவந்தன. 

வைரஸ் பரவலால் அத்தியாவசியப் பொதுச் சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டது இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வு குறிப்பிட்டது.

1.8 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியச் சேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஏழைக் குடும்பங்களின் உடல்நலத்தையும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளையும் பாதித்துள்ளதாக யுனசெப் பிராந்திய பணிப்பாளர் கூறினார்.

குழந்தைகளுக்கும் அன்னையருக்கும் பொதுச் சுகாதாரச் சேவைகள் மிகவும் அவசியம் என்பதால் அவை முழுமையாக நிலைநாட்டப்படுவது முக்கியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment