இத்தாலியில் கொரோனா பலி 100,000 ஐ தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

இத்தாலியில் கொரோனா பலி 100,000 ஐ தாண்டியது

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100,000 ஐக் கடந்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளை அடுத்து அந்த எண்ணிக்கையை எட்டிய 7 ஆவது நாடாக இத்தாலி உள்ளது.

இத்தாலியில் 13 மாதங்களுக்கு முன் ஆரம்பமான வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 100,103 ஆகப் பதிவாகியுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 ஐத் தொட 9 மாதங்கள் ஆகின. ஆனால் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக வெறும் மூன்றரை மாதங்களே ஆகின.

இந்நிலையில், நிலைமை மீண்டும் மோசமடைந்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மரியோ டிராகி கூறியுள்ளார்.

வைரஸ் தொற்று இன்னும் முடியவில்லை. இருப்பினும், தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம், நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்நாட்டின் 60 மில்லியன் மக்கள்தொகையில் 1.65 மில்லியன் பேருக்கு தடுப்பூசி இரண்டு முறை போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment