CID யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

CID யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சியங்களை நிர்மாணித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று (17) கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவர்கள் சார்பாக அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில், பொலிஸ் பரிசோதகர் வில்லாவராச்சி மற்றும் சுசந்த ஆகிய இருவருக்கிடையிலான உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவொன்றை, கொழும்பு குற்றப்பிரிவு இன்று அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கத்திடம் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷானி அபேசேகர, கடந்த வருடம் ஜூலை 31ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, சிறைச்சாலையில் வைத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் அதிலிருந்து குணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment