யாழ். மாநகர சபை சாரதிக்கு பதிலாக வேறொரு சாரதி - வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் மணிவண்ணன் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

யாழ். மாநகர சபை சாரதிக்கு பதிலாக வேறொரு சாரதி - வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் மணிவண்ணன்

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரின் வாகனத்திற்கு, சபை சாரதி அல்லாமல் வேறு ஒரு சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்பு நேற்று முன்தினம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாநகர சபையின் முதல்வர் தான் தனிப்பட்ட வகையில் தனக்கு நம்பிக்கையான சாரதி ஒருவரை நியமிப்பது தொடர்பான பிரேரனை ஒன்றை சபையில் முன்வைத்தார். 

இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேர வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் இதனை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கலாம் என உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களிக்க 10 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அதேவேளை 3 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை. 

இதன் மூலம் 20 மேலதிக வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad