தராதர சாதாரண தர பரீட்சையை சிறந்த முறையில் நடத்தி முடிப்போம் : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

தராதர சாதாரண தர பரீட்சையை சிறந்த முறையில் நடத்தி முடிப்போம் : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விசேட பரீட்சை மண்டபம் அமைக்கப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை சிறந்த முறையில் நடத்தி முடிப்போம் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை 6,22,305 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளார்கள். நாடு தழுவிய ரீதியில் 4,513 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,23,746 பாடசாலை பரீட்சாத்திகளும், 1,98,606 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்கள். இம்முறை 542 விசேட மத்திய தொடர்பு மண்டபமும் அமைக்கப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விசேட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 விசேட பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்படும் அத்துடன் அனைத்து பரீட்சை மண்டபங்களிலும் சுகாதார பணியாளர்கள் சேவையிவ் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

பாடசாலை பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை அஞ்சல் முறைமை ஊடாக பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளாத தனியார் பரீட்சாத்திகள் பரீட்சைகள் திணைக்கள உத்தியோக வலைத்தளத்துக்கு பிரவேசித்து உரிய உபாய முறைகளை பின்பற்றி பரீட்சை அனுமதி அட்டையை பதிவேற்றம் செய்துக் கொள்ள முடியும். 

அத்துடன் பரீட்சாத்திகள் விண்ணப்பித்த பாடங்களிலும், சுய பெயரிலும் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் அதனையும் வலைத்தளம் ஊடாக திருத்திக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment