பேஸ்புக்கில் பழகி விருந்துபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கடத்தல் - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

பேஸ்புக்கில் பழகி விருந்துபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கடத்தல்

விருந்துபசார நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் தப்பி வந்த சம்பவமொன்று பலாங்​கொடையில் இடம்பெற்றுள்ளது.

37 வயதான பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முகநூல் நண்பர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் முகநூல் நண்பரின் தொலைபேசி அழைப்புக்கிணங்க காலை 3 மணியளவில் பலாங்கொடை நகரிலிருந்து களியாட்ட நிகழ்வொன்றுக்குச் செல்வதாக கூறி காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். வாகனத்தில் இருந்த இருவர் அவரை பயமுறுத்தி கை கால்களை கட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

இடையில் கரவனெல்ல பிரதேசத்தில் தேநீர் அருந்துவதற்காக இவரது கை, கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டபோது மலசலகூடத்திற்கு செல்வதாக கூறி இவர் கடத்தல் காரர்களிடமிருந்து தப்பி, ஆற்றில் நீந்தி தப்பி வந்துள்ளார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad