காரை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிலால் கொட்டகலை சுரங்கப் பாதையில் பஸ் விபத்து - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

காரை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிலால் கொட்டகலை சுரங்கப் பாதையில் பஸ் விபத்து

ஹட்டன், தலவாகலை பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப் பாதையினுள் தனியார் பயணிகள் பஸ்ஸில் இலங்கை போக்கு வரத்து பஸ் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

தலவாகலையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸின் பின்னால் வந்த இ.போ.ச பஸ் மோதியதில் இன்று (18) காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

கொட்டகலை சுரங்கப் பாதையினுள் தனியார் பஸ் வந்து கொண்டிருக்கையில் ஹட்டன் பகுதியிலிருந்து காரொன்று தலவாகலையை நோக்கி சென்றுள்ளது. 

இதன்போது காரின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று காரை முந்தி செல்ல முற்பட்ட நிலையில் தனியார் பஸ்ஸின் சாரதி உடனடியாக பஸ்ஸை நிறுத்திய போதே பின்னால் வந்த இ.போச பஸ் கட்டுப்பாட்டை மீறி தனியார் பஸ்ஸின் பின் புறம் மோதுண்டுள்ளது.

விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் பஸ் சேதமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சாரதிகள் சுரங்கப் பாதையினுள் வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad