தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறனுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறனுக்கு கொரோனா

தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

87 வயதுடைய இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தியா - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிற நிலையில், கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து, இந்த வரிசையில் தற்போது, தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறனும் இணைந்துள்ளாா்.

கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பழ. நெடுமாறனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற்றதையடுத்து, அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Post Bottom Ad