லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு

லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

1 ரிச்டர் அளவிற்கும் குறைந்த சிறிய அளவிலான நில அதிர்வே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 31 ஆம் திகதியும் எகிரியா பகுதியில் சிறிய நில அதிர்வு பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad