முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமர் மஹிந்தவின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறி குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad