கிழக்கு மாகாணத்தில் ஆறுகளைக் காப்போம் திட்டம் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

கிழக்கு மாகாணத்தில் ஆறுகளைக் காப்போம் திட்டம் ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

“சுரகிமு கங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஆறுகளைக் காப்போம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் எம். சிவகுமார் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் அமைச்சுக்களுக்கிடையிலான தேசிய முன்னெடுப்புக் குழுவினால் அமுலாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் “சுரகிமு கங்கா” தேசிய லேவைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை 16.02.2021 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து இத்திட்டம்பற்றி தெளிவூட்டலை வழங்கிய பணிப்பாளர் சிவகுமார் இது தங்குதிறனுள்ள நீண்ட காலத் நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மாவட்ட ரீதியில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மத்திய சுற்றாடர் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ். கோகுலன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி, விவசாயம், கால்நடை, சமுர்த்தி, நீர்ப்பாசனம், தேசிய நீர் வழங்கல், காணிப்பயன்பாடு, சுகாதாரம், கல்வி, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவம், சிவில் பாதுகாப்பு போன்ற பிரிவுகளின் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad