கொழும்பு நகரில் கார் கண்ணாடிகளை கொள்ளையிட்டவர் சிக்கினார்..! - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

கொழும்பு நகரில் கார் கண்ணாடிகளை கொள்ளையிட்டவர் சிக்கினார்..!

(செ.தேன்மொழி)

தெமட்டகொட பகுதியில் கார் கண்ணாடிகளை கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தெமட்டகொட பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று சந்தேகத்திற்கிடமான சைக்கிள் ஒன்றை அவதானித்துள்ள பொலிஸார் அதனை சோதனை செய்துள்ளனர். இதன்போது சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கார் கண்ணாடி சோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பஞ்சிகாவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்காடிகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு நகரத்தில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் கண்ணாடிகள் கொள்ளையிடப்பட்டு வருவதாக அண்மைக் காலமாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சந்தேகநபர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கவும் பொலிஸார் எதிர்ப்பார்த்துள்ளனர்.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ். பெரேராவின் தலைமையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad